×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓட்டுநர் நடத்துனர் சாப்பிட தனி அறை ஒதுக்க கூடாது பயண வழி உணவகங்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு...!

ஓட்டுநர் நடத்துனர் சாப்பிட தனி அறை ஒதுக்க கூடாது பயண வழி உணவகங்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு...!

Advertisement

போக்குவரத்து கழகம் பயண வழி உணவகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சாப்பிட தனி அறை ஒதுக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, வெளியூர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் சாப்பிட வசதியாக வழியில் ஏதாவது ஒரு உணவகத்தில் பேருந்தை நிறுத்துவது வழக்கம். 

அப்போது அந்த உணவகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு இடம் இருக்கும். அங்கு சென்று தான் டிரைவர்-கண்டக்டர்கள் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்கும். 

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சாப்பிடுவதற்கு  சில உணவகங்களில் பணம் வாங்குவதில்லை. ஆனால் பயணிகள் சாப்பிடும் உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும். இதுகுறித்து பல புகார்கள் போக்குவரத்து கழகத்துக்கு சென்றுள்ளது. 

இதனையடுத்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அனைத்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கும் அனுப்பி இருக்கும் உத்தரவில் கூறி இருப்பதாவது:- 

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உணவு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #chennai #Transport Corporation #Driver and Conductor #Should Not Separate Room Eat Restaurants
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story