செல்போன் சார்ஜ் போட்ட இளைஞர் ..தூக்கி வீசிய மின்சாரம்.. அதிர்ச்சி..!
செல்போன் சார்ஜ் போட்ட இளைஞர் ..தூக்கி வீசிய மின்சாரம்.. அதிர்ச்சி..!
மங்களபுரம் கிருஷ்ணதாஸ் மெயின் ரோடு பகுதியில் பிரசாந்த் தனது மனைவியுடன் வசித்து வந்ததுள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்க்ஷன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பிரசாந்த் வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பிரசாந்த் தனது செல்போனுக்கு சார்ஜ் போட வீட்டில் இருந்த மின்சார பெட்டியில் உள்ள சுவிட்ச்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்ரசாரம் தாக்கி பிரசாந்த் தூக்கி வீசபட்டதில் அவரது தலையில் அடிபட்டு மயங்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து வெளியே சென்றிருந்த பிரசாந்தின் மனைவி சினேகா வீட்டிற்கு வந்த போது கணவர் ரத்த காயத்துடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரசாந்த்தை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் பிரசாந்த்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக வீட்டில் ஸ்விட்ச் போர்டில் ஏற்பட்ட மின் கசிவால் தான் பிரசாந்த்திற்கு ஷாக் அடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.