120 நாட்களுக்குப் பிறகு திறக்கப்படும் சினிமா தியேட்டர்கள்.! என்னென்ன விதிமுறைகள் தெரியுமா.?
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே,
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நான்கு மாதங்களுக்குப் பிறகு, தியேட்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு, தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதால், தியேட்டர்களில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.