கஞ்சா விற்பனைக்கு கைப்பையுடன் புறப்பட்ட தாய்க்கிழவியை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்.!
கஞ்சா விற்பனைக்கு கைப்பையுடன் புறப்பட்ட தாய்க்கிழவியை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்.!
போடியில் கஞ்சா விற்பனைக்கு செல்ல முயன்ற மூதாட்டி அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகளவு நடைபெறுகின்றன. இதனை கட்டுக்குள் வைக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை என்பது நடந்துதான் வருகிறது.
இந்நிலையில், நேற்று போடி காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள கீழராஜ வீதியில் கையில் பையுடன் மூதாட்டி சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டு இருந்துள்ளார்.
இதனைகவனித்த அதிகாரிகள் மூதாட்டியை அழைத்து விசாரிக்கையில், அவர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி சரசு (வயது 65) என்பது தெரியவந்தது. அவரின் கைகளில் இருந்த பையில் 1 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, மூதாட்டியை கைது செய்த அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.