மழையில்லாமல் 2 வருடம் கழித்து முற்றிலும் வறண்ட மூல வைகை..! சோகத்தில் கிராம மக்கள்.!
மழையில்லாமல் 2 வருடம் கழித்து முற்றிலும் வறண்ட மூல வைகை..! சோகத்தில் கிராம மக்கள்.!
தேனி மாவட்டத்தில் வருஷநாடு உள்ள கடமலை - மயிலை ஒன்றியத்தில் இருக்கும் வெள்ளிமலை வனப்பகுதியில், மூல வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. மூல வைகையில் உறைகிணறுகள் அமைத்து கடமலை - மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் 2 வருடமாக மூல வகையில் நீர்வரத்து இருந்து வந்தது. இதனால் அதன் வழியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வு பெற்றது. இதனால் விவசாயமும் நன்றாக நடந்தது. கடந்த 3 மாதமாக மழை குறைந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதனால் மூலவைகையில் நீர் வரத்து குறைந்து, முற்றிலும் வறண்டுள்ளது. உறைகிணறுகளின் நீர்மட்டமும் குறைவதால், கடமலை - மயிலை ஒன்றிய கூட்டுகுடிநீர் திட்டத்தை விரைந்து அதிகாரிகள் முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.