தார் ரோடா? மணல் ரோடா? தவறி விழுந்த கர்ப்பிணி.. மண்வெட்டியுடன் களமிறங்கிய தேனி தவெக நிர்வாகி.. குவியும் பாராட்டு.!
தார் ரோடா? மணல் ரோடா? தவறி விழுந்த கர்ப்பிணி.. மண்வெட்டியுடன் களமிறங்கிய தேனி தவெக நிர்வாகி.. குவியும் பாராட்டு.!

தேனி மாவட்டத்தில் உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சாலையோரம் அவ்வப்போது காற்றினால் தூசு மற்றும் மணல் அடித்து வரப்பட்டு, சாலையோரம் அதிகம் சேர்க்கப்படும்.
இதனால் ஒருசில நேரம் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படும். இவ்வாறான விபத்தை குறைக்க ராம்கோ நிர்வாகமும், உள்ளூர் அரசுத்துறை அதிகாரிகளும், தூய்மை பணியாளர்கள் கொண்டு அதனை சீர்படுத்தியும் வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக நிர்வாகிகள் நியமனத்தில் தொடரும் சர்ச்சை.. மகளிர் அணி பரபரப்பு குமுறல்.!
இதனிடையே, கடந்த சில நாட்களாக தேங்கியிருந்த சாலையோர மணலில் சிக்கி, கர்ப்பிணி பெண் ஒருவர் விபத்தில் சிக்கினார். அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றபோது விபத்தை எதிர்கொண்டார்.
இந்த தகவல் அறிந்த தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் லெப்ட் பாண்டி, தனது நிர்வாகிகள் உதவியுடன் தானும் களத்தில் இறங்கி, மண்வெட்டி கொண்டு சாலையில் இருந்த மணலை அப்புறப்படுத்தினர். மேலும், மணல் அவ்வப்போது தேங்காத வண்ணம் தினமும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து, அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட தேவையான நடவடிக்கை எடுப்பதகவும் லெப்ட் மணி உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: சோழர்கள் தெலுங்கர்களா? சர்ச்சையை ஏற்படுத்திய விவாதமும், வைரல் விடியோவும்.!