இருளில் மூழ்கும் கிராமம்., தீப்பந்தம் ஏந்தி மக்கள் எதிர்ப்பு..!!
இருளில் மூழ்கும் கிராமம்., தீப்பந்தம் ஏந்தி மக்கள் எதிர்ப்பு..!!
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக மின்சாரம் வழங்காத காரணத்தால், அப்பகுதி கிராம மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி அவர்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக மின்சாரம் சரியாக வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
பலமுறை இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிய போதும் இந்த நிலையை தொடர்கிறது என்று கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால் கையில் தீப்பந்தம் ஏந்தி அவர்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள்.