மகிழ்ச்சியான செய்தி..! தமிழகத்தில் மூன்றாவது நபர் கொரோனாவிடம் இருந்து விடுதலை!
Third person in tamilnadu cured from corono
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது நபர் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த முதல் நபர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்.
இதுவரை தமிழகத்தில் குணமாகிய மூவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். மருத்துவர்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.