×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகி ஒரு மாதமாக முதலிரவை ஒத்திவைத்த கணவர்.! கடைசியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Thirumanamaki oru mathamaka muthaliravi thalli potta kanavar, pinnar nikalntha soga sambavam

Advertisement

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(30). இவர் அமெரிக்காவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக தாயகம் வந்துள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாமல் போனது.

இந்நிலையில் பாஸ்கரின் பெற்றோர் பாஸ்கருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதனையடுத்து அந்த இளம்பெண் பல கனவுகளுடன் முதலிரவு அறைக்கு சென்றுள்ளார். ஆனால் பாஸ்கர், தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி முதலிரவை தடுத்துள்ளார்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் பல காரணங்களை கூறி புது மனைவியிடம் பழகுவதை தவிர்த்துள்ளார் பாஸ்கர். இதனால் விரக்தி மற்றும் பொருமையிழந்த புதுமணப்பெண் தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். அதனை அடுத்து பெண்ணின் பெற்றோர் பாஸ்கரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

அதன்பின் பாஸ்கரை அழைத்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாஸ்கர் வெளிநாட்டில் இருக்கும் போது அங்கு ஆண் இளைஞன் ஒருவருடன் 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாகவும், பெண்கள் மீது தனக்கு மோகம் இல்லை எனவும் கூறினார். இதனைக்கேட்டு இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதனையடுத்து பெண்ணின் வீட்டார் குண்டூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#first night #Husband #Not interest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story