ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #தாமிரபரணி_படுகொலை; காரணம் என்ன?.. அரசு இயந்திரத்தால் காவு வாங்கப்பட்ட 17 உயிர்கள்.!
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #தாமிரபரணி_படுகொலை; காரணம் என்ன?.. அரசு இயந்திரத்தால் காவு வாங்கப்பட்ட 17 உயிர்கள்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலையில், ஊதிய உயர்வை வலியுறுத்தி போராடிய அப்பாவி தமிழ் மக்கள் அன்றைய அரசு இயந்திரத்தால் நசுக்கப்பட்டனர். இந்த துயரத்தில் அங்கு வசித்து வந்த 17 பேர் படுகொலை செய்யப்டட்டனர்.
நெல்லை மாவட்ட வரலாற்றில் முக்கிய விஷயமாக கருதப்படும் மாஞ்சோலை விவகாரம் கடந்த ஜூலை 23, 1999ல் நடைபெற்றது. இந்த துயரம் நடந்து முடிந்து 24 ஆண்டுகள் ஆகின்றன. இந்த விஷயத்தை நினைவு கூர்ந்துள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "தூக்கு கயிறு, மின்சார நாற்காலி என்ற வரிசையில் நதியையும் ஒரு கொலை கருவியாக பயன்படுத்த முடியும் என்ற அரச சாதனையை நிகழ்த்தியவர் கருணாநிதி.
கருணாநிதி வரலாறு எழுதப்படும் பொழுது அவருடைய பேனா சிலையாக இருக்காது தாமிரபரணியில் அடித்து கொல்லப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ரத்தம்தான் அவருடைய வரலாறாக இருக்கும்.!
அரசியல் கட்சிகள் அணுகமுடியாத ஆதிக்க கோட்டைகளாக இருந்த தமிழக மலைத்தோட்டங்களில் காற்றில் கலந்த பேரோசையாக இருந்த அடித்தள மக்களின் அவலக் குரலை அனைத்துலக மனித உரிமையாளர்களின் கவனத்துக்கு முதன் முறையாக புதிய தமிழகம் கொண்டுவந்தது.
இதன் தொடர்ச்சியே மாஞ்சோலை போராட்டம்... தாமிரபரணி படுகொலைகள்... புதிய தமிழகம் கட்சி தொடர் போராட்டங்களே இன்று தமிழக மலைத்தோட்ட மக்களுக்கு விடுதலை காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை நல்கியது...
தாமிரபரணி தியாகிகள்: விக்னேஷ் (1 வயது), ரத்தின மேரி, சஞ்சீவி, ஜோஸ்பின், ராஜூ, வேலாயுதம், முருகன், அப்துல் ரகுமான், ஜான் பூபாலராயன், ஆறுமுகம், ரத்தினம், ஜெயசீலன், குட்டி (எ) குமார், அந்தோனி, மாணிக்கம், கெய்சர், ஷாநவாஸ். மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!!" என தெரிவித்துள்ளார்