தமிழகத்தில் இப்படியொரு சோகம்.. சாலைவசதியில்லாது கர்ப்பிணியை தொட்டில்கட்டி தூக்கி வரும் இளைஞர்கள்..!
தமிழகத்தில் இப்படியொரு சோகம்.. சாலைவசதியில்லாது கர்ப்பிணியை தொட்டில்கட்டி தூக்கி வரும் இளைஞர்கள்..!
உடுமலையை அடுத்துள்ள மலைக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் வயிறு வலியால் துடித்த கர்ப்பிணியை தொட்டில் கட்டி இளைஞர்கள் தூக்கி வந்த சோகம் நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, குழிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதி ஆகும். இங்கு சாலை வசதி இல்லாத காரணத்தால், மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் கிடையாது.
இதனால் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளை தொட்டிலிட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரும் நிலைதான் உள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தில் வசித்து வருபவர் விஜயன். இவரின் மனைவி சரண்யா (வயது 28). இவர் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இவருக்கு நேற்று திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்படவவே, கிராமத்து இளைஞர்கள் ஆயிரம் அடி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்க தொட்டில் கட்டி பெண்ணை தொட்டிலில் ஏற்றிக்கொண்டு iangi மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், தங்களது கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்பது சிரமமாக இருக்கிறது. அரசு தங்களின் கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.