அடக்கொடுமையே! தனது பேரன், போத்திக்காக பல ஆண்டுகளாக பணத்தை சேமித்து வைத்த மூதாட்டிகள்! கொடுக்க நினைத்த போது காத்திருந்த அதிர்ச்சி.
Thirupure old ladies money
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பூமலூர் ஊரை சேர்ந்த சகோதரிகளான ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள் என்ற மூதாட்டிகள் இருவர் தங்களது மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களுக்கு கிடைக்கும் பணத்தை சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டவர்கள். அவர்களது கணவன்கள் இறந்த நிலையில் அன்று முதல் சேமித்து வைத்து தங்களது கடைசி நாளில் பேரன், பேத்திகளுக்கு அதை பிரித்து கொடுக்கலாம் என எண்ணியுள்ளனர்.
இந்நிலையில் திடீரென ஒரு இருவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போகவே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது பணத்திற்காக தங்களது மகன்கள் கஷ்டப்படுவதை பார்த்த மூதாட்டிகள் தாங்கள் சேமித்து வைத்த பணத்தை பற்றி கூறியுள்ளனர்.
அதனை அடுத்து மகன்கள் சென்று பார்த்த போது அவை செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பற்றி மகன்கள் கூறியதை கேட்டு மூதாட்டிகள் வேதனையடைந்துள்ளனர்.