பதியப்பட்ட தொகையை விட ரூ.1 கூடுதலாக விற்பனை செய்த சென்னை சில்க்ஸ்; ரூ.1 இலட்சம் இழப்பீடு வழங்க அதிரடி தீர்ப்பு.!
பதியப்பட்ட தொகையை விட ரூ.1 கூடுதலாக விற்பனை செய்த சென்னை சில்க்ஸ்; ரூ.1 இலட்சம் இழப்பீடு வழங்க அதிரடி தீர்ப்பு.!
திருவள்ளூரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் துணி எடுக்க சென்றுள்ளார். அங்கு அவர் சென்னை சில்க்சின் நிர்வாகம் சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த செருப்பு ஒன்றையும் வாங்கியுள்ளார்.
ரூ.300 & சில்லறைக்கு செருப்பு விற்பனை செய்யப்பட்ட நிலையில், விற்பனை செய்யப்பட இருந்த டேக்கில் பதிவு செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக ரூ.1 வைத்து விற்பனை செய்துள்ளனர்.
இதனை தாமதமாக கண்டறிந்த வழக்கறிஞர், நிறுவன மேலாளர் & பணியாளர்களிடம் புகார் கூறியுள்ளார். மேலாளர் பார்க்க செல்வந்தர் போல இருக்கும் நீங்கள், ரூ.1 க்கு குரல் கொடுப்பது ஏன்? என கேட்டு அனுப்பி வைத்துள்ளார்.
வழக்கறிஞரின் பின்புலம் அறியாமல் சில வார்த்தைகளையும் விட, தான் நுகர்வோர் நீதிமன்றத்தில் உங்களை சந்திக்கிறேன் என புறப்பட்டு சென்றவர் மனுதாக்கல் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட பயனருக்கு வழங்க உத்தரவிட்டனர்.
கூடுதலாக ரூ. 5 ஆயிரம் வழக்குக்கான செலவு தொகையையும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் வழக்கறிஞர் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளளது. ரூ.1 கூடுதலாக வைத்து விற்பனை செய்ததற்கு ரூ.1 இலட்சம் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.