நடுரோட்டில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடி லேடி புள்ளிங்கோக்கள் ரகளை.!
நடுரோட்டில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடி லேடி புள்ளிங்கோக்கள் ரகளை.!
கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடந்த 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ - மாணவிகள் நேரடி வகுப்புகளில் கலந்துகொண்டு பயின்று வருகிறார்கள். தலைநகர் சென்னையில் வழக்கம்போல மாணவர்கள் பேருந்து மற்றும் இரயிலில் ஆபத்தான சாகசம் மற்றும் அட்டகாசம் செய்ய தொடங்கியதால், காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சர்ச்சை செயல்களில் ஈடுபடும் மாணவ - மாணவிகளை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். தாக்குதல் சம்பவங்கள் நடந்தால் மற்றும் அதற்கேற்றவாறு கண்டிப்பு செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் நகரில் உள்ள காமராஜர் சிலை அருகே மாணவிகள் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லும் இடத்தில், மாணவிகள் கூச்சலிட்டவாறு பிறந்தநாள் கொண்டாடவே, சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் மாணவிகளை கண்டித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.