தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தடுப்பணையில் செல்பி எடுத்து தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு.. செல்பி பிரியர்களே உஷார்.!

தடுப்பணையில் செல்பி எடுத்து தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு.. செல்பி பிரியர்களே உஷார்.!

Thiruvallur Kosasthalaiyar River Man Died Taking Selfie Body Found Advertisement

 

நினைவுகளை புகைப்படமாக பதிவு செய்ய விரும்பும் இக்காலத்தில், ஆபத்தான செல்பிகளும் எடுக்கப்படுகின்றன. அதனால் சில சமயம் உயிரிழப்புகளும் நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம், வெங்கல் குருவாயல் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 20). இவர் கடந்த புதன்கிழமை மாலை நேரத்தில் நண்பர்களோடு ஆரிக்கம்பட்டு திருகண்டலம் தடுப்பணைக்கு சென்றுள்ளார். 

அங்கு நின்று ஆபத்தை அறியாமல் செல்பி எடுத்தபோது, ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் ஆவடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

thiruvallur

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படகு உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், திருகண்டலம் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு எதிரில், 3 கி.மீ தூரத்தில் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அவரின் உடலை வெங்கல் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvallur #Kosasthalaiyar River #tamilnadu #death #selfie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story