குடிபோதையில் மகன் தாய்க்கு செய்யும் காரியமா இது?.. இரத்த வெள்ளத்தில் அரங்கேறிய சோகம்.!
குடிபோதையில் மகன் தாய்க்கு செய்யும் காரியமா இது?.. இரத்த வெள்ளத்தில் அரங்கேறிய சோகம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு, கூடம்பாக்கம் ஆட்சியர் நகரில் வசித்து வருபவர் ஆனந்தன் (வயது 60). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஆனந்தின் மனைவி மல்லிகா (வயது 54). இவர்கள் இருவருக்கும் ராமதாஸ் என்ற 30 வயது மகனும், ஜெயபால் என்ற 24 வயது மகனும் உள்ளனர்.
ராமதாசுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், அவர் பக்கத்து தெருவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். ஜெயபாலுக்கு இன்னும் திருமணம் ஆகாததால், தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார்.
மதுபழக்கத்தை வைத்திருந்த ஜெயபால் குடித்துவிட்டு பணிகளுக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே ஜெயபால் - அவரின் தாய் மல்லிகா இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று, மதுபோதையில் வந்து தாயிடம் ரகளை செய்த ஜெயபால், ஆத்திரத்தில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டிலேயே போதையில் உறங்கிவிட்ட நிலையில், மறுநாள் ராமதாஸ் தாயை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, தாய் உயிரிழந்து கிடந்த நிலையில், போதையில் உறங்கிய தம்பியை எழுப்பி கேட்கையில் விபரம் புரியவந்துள்ளது. இதன்பின்னர், வெள்ளவேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஜெயபாலை கைது செய்தனர்.