#BigBreaking: தமிழகமே பரபரப்பு.. 12-ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை., பெற்றோர் போராட்டம்., தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
#BigBreaking: தமிழகமே பரபரப்பு.. 12-ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை., பெற்றோர் போராட்டம்., தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
திருத்தணி அருகே அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் பயின்று வந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி, கீழச்சேரி நகரில் தனியாருக்கு சொந்தமான அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதே பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தவாறு 17 வயது சிறுமி 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி பள்ளியில் உள்ள விடுதியில் இன்று திடீரென மர்மமான முறையில் தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினர் மற்றும் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் மரண செய்தியை கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென பள்ளிக்கு முன்பு போராட்டம் செய்ய தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் துறையினர் திருத்தணி - கீழச்சேரி பகுதியில் குவிக்கப்ட்டுள்ளனர்.
சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை உடனடியாக சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை பள்ளியில் மாணவ - மாணவியர்கள் தற்கொலை செய்துகொண்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியரையே சாரும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.