விஷமாக மாறிய உணவு?. 400 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு.. 7 பேர் பலி?..! பேரதிர்ச்சி சம்பவம்.!!
விஷமாக மாறிய உணவு?. 400 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு.. 7 பேர் பலி?..! பேரதிர்ச்சி சம்பவம்.!!
தனியார் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்த பெண்கள் உணவு சாப்பிட்ட பின்னர் வாந்தி, மயக்கம், பேதியால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேரின் நிலை தெரியவில்லை என கூறி சக பெண் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு, ஜமீன்கொரட்டூர் பகுதியில் தனியார் கப்பல் எஞ்சினியரிங் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி தற்போது செயல்படாமல் இருக்கும் காரணத்தால், 7 தளம் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை நிறுவனம், தனது நிறுவன பணியாளர்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சார்ந்தவர்களும் விடுதியில் தங்கியிருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், வெளிமாவட்டத்தை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக 400 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த தகவலை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், வெள்ளவேடு காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது உறுதியானது.
இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக உருவாகியதால் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இவர்களில் 8 பேரின் நிலைமை குறித்து தகவல் தெரியவில்லை என பெண் ஊழியர்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.
இவர்கள் இறந்து இருக்கலாம் என்றும், இதுகுறித்த எந்த தகவலும் எங்களுக்கோ அல்லது பெண்களின் குடும்பத்தினருக்கோ தெரியப்படுத்தவில்லை என்றும் புகார் தெரிவித்த பெண்கள், 500 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் பகுதியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்தால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில், தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெண் ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.