பெண் காவல் ஆய்வாளருக்கு பளார் விட்ட அரசியல்கட்சி பிரமுகரின் மனைவி; கோவிலுக்குள் பரபரப்பு.!
பெண் காவல் ஆய்வாளருக்கு பளார் விட்ட அரசியல்கட்சி பிரமுகரின் மனைவி; திருவண்ணாமலை கோவிலுக்குள் பரபரப்பு சம்பவம்.!
திருவண்ணாமலை கோவில் அறங்காவலர் குழுத்தலைவராக செயல்பட்டு வரும் ஜீவானந்தத்தின் மீது பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அதிமுக வழக்கறிஞர் அப்பு என்பவரிடம் வம்பிழுத்து, அதிமுகவினர் படையாக சென்று முற்றுகையிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி இருக்கின்றனர்.
இவரின் சகோதரர் மற்றும் திமுக திமுக பிரமுகர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் மனைவி சிவசங்கர். இருவரும் சேர்ந்து தற்போது காவல் அதிகாரியை தாக்கியதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் 27ம் தேதி ஆருத்ரா தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளில் திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், வந்தவாசி மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். கோவிலுக்குள் ஸ்ரீதர், அவரின் மனைவி சிவசங்கரி ஆகியோர் நீண்ட நேரம் சாமி முன்பு நின்று கும்பிட்டு இருக்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு சுவாமி தெரியவில்லை.
இதனால் காவல் ஆய்வாளர் கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கோரிக்கை வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரி நான் யார் தெரியுமா? என்று ஆரம்பித்து காவலரை கடிந்து கொண்டுள்ளார். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட, நிகழ்விடத்தில் இருந்த பெண் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு எதிராக பதில் வாதங்களை முன்வைத்துள்ளார்.
அப்போது, சிவசங்கரி காவல் ஆய்வாளரை பளாரென அடித்துள்ளார். இதன்பின் சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். நடந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த காவலர்கள், இனி நாங்கள் பணி செய்ய மாட்டோம் என போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.
இந்த விவகாரம் துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனின் கவனத்திற்கு செல்லவே, உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகாரும் அளித்துள்ளார். இதனிடையே, சம்பவம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மேற்கூறிய அறங்காவலர் தரப்பு மன்னிப்பு கேட்பதாக கூறி இருக்கிறது.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத காவல் ஆய்வாளர் காந்திமதி புகாரில் உறுதியாக இருக்கவே, சிவசங்கரி, ஸ்ரீதர் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கோவில் ஊழியர் என மூவரின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.