×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போன மாசம் நடந்த ஆக்ஸிடெண்டுக்காக இந்த மாசம் நடந்த சாலை மறியல்!,, இந்த மக்கள் ரொம்ப மோசம்..!

போன மாசம் நடந்த ஆக்ஸிடெண்டுக்காக இந்த மாசம் நடந்த சாலை மறியல்!,, இந்த மக்கள் ரொம்ப மோசம்..!

Advertisement

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள வேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (35). இவரது மனைவி சுதா.  இந்த தம்பதியினர் கடந்த மாதம் விருத்தாசலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றனர். வேட்டக்குடி கிராமம் அருகே வந்தபோது, பின்னால் வந்த மினிலாரி பாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர்.

இந்த விபத்து குறித்த புகாரின் அடிப்படையில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாண்டியனை அவரது உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அதே ஊரில் உள்ள விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் பாண்டியனை கட்டிலில் படுக்க வைத்தபடி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பாண்டியனுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும், விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் குறித்து  தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அவ்வழியாக பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்ற ஊழியர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vridhachalam #Cuddalore District #Road accident #road block #protest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story