காதல் விவகாரத்தில் 20 வயது இளைஞர் கொன்று புதைப்பு.. 16 வயது சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்..! 2k நிப்பாஸ் பதறவைக்கும் செயல்.!
காதல் விவகாரத்தில் 20 வயது இளைஞர் கொன்று புதைப்பு.. 16 வயது சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்..! 2k நிப்பாஸ் பதறவைக்கும் செயல்.!
20 வயது இளைஞர் காதலிக்கும் பெண்ணின் மீது ஆசைகொண்ட 16 வயது சிறுவன், அவரை கொலை செய்து புதைத்த பயங்கரம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை செல்வமருதூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரையின் மகன் ராஜேந்திரன் (வயது 20). தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வந்தவர், கடந்த 2022 அக். 9ம் தேதி குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்று வருகிறேன் என புறப்பட்டவர் வீட்டிற்கு வரவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஓராண்டாக ரஜேந்திரனை தேடி வந்த காவல் துறையினர் 16 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜேந்திரன் காதல் விவகாரத்தில் கைதான சிறுவன் உட்பட 2 சிறார்களால் கொல்லப்பட்டது அம்பலமானது.
அதாவது, ராஜேந்திரன் காதலித்து வந்த பெண்ணை 16 வயதாகவும் சிறுவனும் காதலித்து வந்துள்ளான். இதனால் ராஜேந்திரன் தனது காதலுக்கு இடையூறாக இருப்பார் என்பதை உணர்ந்த சிறுவன், சம்பவத்தன்று நுங்கு வெட்டி சாப்பிட செல்லலாம் என ராஜேந்திரனை நயவஞ்சகத்துடன் தூத்துக்குடி மாவட்டம் அரசூர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு வைத்து தனது கூட்டாளிகளான 16 வயது மற்றும் 14 வயது சிறார்களுடன் சேர்ந்து 3 பேராக ராஜேந்திரனை வெட்டிச்சாய்த்து கொலை செய்துள்ளனர். அவரின் உடலை பனைமர குழியில் போட்டு புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல நடித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 3 சிறார்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.