சிலிண்டருக்கு அதிக பணம் செலுத்த தேவையில்லை.. புதிய விலை நிலவரம் இதோ..! தூத்துக்குடியில் இல்லத்தரசிகள் குஷி..!!
சிலிண்டருக்கு அதிக பணம் செலுத்த தேவையில்லை.. புதிய விலை நிலவரம் இதோ..! தூத்துக்குடியில் இல்லத்தரசிகள் குஷி..!!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரிகளின் விலை மாதாமாதம் எரிவாயு விற்பனை நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியர்களாலும் உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்படுகிறது.
நடப்பு மார்ச் மாதத்திற்கு இந்திய ஆயின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சிலிண்டர் தூத்துக்குடியில் ரூ.1,167 க்கும், கோவில்பட்டியில் ரூ. 1,065 க்கும், கழுகுமலையில் ரூ. 1,174 க்கும், கயத்தாறில் ரூ.1,177 க்கும், எட்டயபுரத்தில் ரூ. 1,165 க்கும், சாத்தன்குளத்தில் ரூ. 1,184 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, பாரத் பெட்ரோலியம் சிலிண்டரின் வீட்டு உபயோக எரிவாயு விலை ரூ.1,167 க்கும், இந்துஸ்தான் நிறுவனத்தின் வீட்டு உபயோக எரிவாயு ரூ.1,167 க்கும் விற்பனை செய்யப்படும். நுகர்வோர்கள் அரசு அறிவிக்கப்பட்டுள்ள தொகையை தவிர்த்து, மேற்படி பணம் கொடுக்க வேண்டாம்" என கூறியுள்ளார். இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.