போன் ல சிரிச்சி சிரிச்சி பேசுறா... புதுமணப்பெண் படுகொலை.! மாமியார் வீட்டில் பயங்கரம்.!!
போன் ல சிரிச்சி சிரிச்சி பேசுறா... புதுமணப்பெண் படுகொலை.! மாமியார் வீட்டில் பயங்கரம்.!!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், மாமியார் வீட்டிற்கு சமாதானம் பேச சென்று மனைவியை கொலை செய்து, மாமியாரை கத்தியால் குத்தி உயிருக்கு போராட வைத்த பயங்கரம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் பொன்ராஜ் (வயது 24). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள தாளமுத்து நகர், பாலதண்டாயுதம் தெருவில் வசித்து வந்தவர் மாரிச்செல்வி (வயது 19). பொன்ராஜுக்கும் - மாரிச்செல்விக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், மாரிச்செல்வி அவ்வப்போது செல்போனில் சிரித்து பேசி வந்துள்ளார். இது பொன்ராஜுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த 10 முன்னதாகவே இந்த விஷயம் தொடர்பாக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், பொன்ராஜின் தாயார் மருமகளை சில நாட்கள் பெற்றோர் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனால் கடந்த 10 நாட்களாக மாரிச்செல்வி பெற்றோருடன் தங்கியிருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவில் பொன்ராஜ் மனைவியிடம் சமாதானம் பேச மாமியார் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற நிலையில், பொன்ராஜுடன் அவரின் நண்பர்கள் மந்திரமூர்த்தி (வயது 22), முத்துக்குமார் ஆகியோரும் வந்துள்ளனர்.
மாமியார் வீட்டில் பொன்ராஜ் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறை ஏற்படுத்தவே, ஆத்திரமடைந்த பொன்ராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் தலையில் வெட்டி, உடலில் சரமாரியாக குத்தியுள்ளார். மகளை காப்பாற்ற வந்த மாமியார் மாரியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதன்பின்னர் பொன்ராஜ் மற்றும் அவனின் நண்பர்கள் தப்பி சென்றுவிட, மாரிச்செல்வி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தாளமுத்து நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாரிச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் பொன்ராஜ் மற்றும் அவரின் நண்பர்களை தேடி வருகின்றனர். திருமணம் முடிந்த 5 மாதத்தில் பெண் கணவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.