மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!
tight protection in all airport
குடியரசு தினவிழா வருகின்ற 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதிதிட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மங்களூரு விமான நிலையத்தில் பை ஒன்று அனாதையாக கிடந்தது. அதில் இருந்த மூன்று வெடிகுண்டுகள் நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் அழிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டுகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பயணிகளின் உடமைகளை வெடிகுண்டு நிபுணர்கள் மட்டுமின்றி வெடிகுண்டை கண்டறியும் மோப்ப நாய் மூலமாகவும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு பார்வையாளர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல விமான நிலையங்களில் இதுவரை இருந்த 5 அடுக்கு பாதுகாப்பு 7 அடுக்காக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.