கல்லூரி மாணவிகளின் வீடியோ..! அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்த டிக் டாக் காதல் மன்னன்..!
Tik tok crime kadhal mannan kannan arrested
கல்லூரி மாணவிகளுக்கு தெரியாமல் அவர்களை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறித்த காதல் மன்னன் கண்ணன் எந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்காசி அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 19 வயதான இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். டிக் டாக்கில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் டிக் டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் டிக் டாக்கில் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடன் படிக்கும் மாணவிகள், பள்ளி மாணவிகளை வைத்தும் அவ்வப்போது டிக் டாக் வீடியோ போட்டு வந்துள்ளார் கண்ணன். அதேநேரம், சில மாணவிகளுக்கு தெரியமலையே அவர்களை படம் பிடித்து, தான் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் டிக் டாக்கில் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இதுபோல் ஒரு பெண்ணை மிரட்டி 4 லட்சம் பணம் பறித்துள்ளார். மற்றொரு மாணவியிடம் 2 லட்சம் கேட்டு மிரட்ட, அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே சேர்ந்தமரம் போலீசாரிடம் மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க, தற்போது கம்பி எண்ணி வருகிறார் காதல் மன்னன் கண்ணன்.