தற்கொலைக்கு முயன்ற தாய்.. பச்சிளம் பிஞ்சுக்கு நேர்ந்த சோகம்.. நெல்லையில் பரிதாபம்.!
தற்கொலைக்கு முயன்ற தாய்.. பச்சிளம் பிஞ்சுக்கு நேர்ந்த சோகம்.. நெல்லையில் பரிதாபம்.!
தாய் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், தவறுதலாக எலிமருந்தை உட்கொண்ட 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியை சார்ந்த பெண்மணி, தனது கணவர் மற்றும் 8 வயது கவிதா என்ற குழந்தையுடன் வசித்து வருகிறார். தம்பதிகளுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், இன்று வீட்டில் இருந்த பெண்மணி, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். தாய் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், சிறுமி கவிதாவும் எலிமருந்தை தவறுதலாக உட்கொண்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி துடிதுடித்து உயிரிழக்கவே, அக்கம் பக்கத்தினர் எதற்ச்சையாக இவர்களை கவனிக்கையில் விபரீதம் புரிந்துள்ளது. பின்னர், உடனடியாக சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி வீட்டிலேயே உயிரிழந்ததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.