பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான தலைமை ஆசிரியர் கைது.!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான தலைமை ஆசிரியர் கைது.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வடக்கு பஜார் பகுதியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக கிறிஸ்டோபர் ஜெபக்குமார் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், மாணவியின் வாட்சப் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது உறவினரிடம் விஷயத்தை தெரியப்படுத்தவே, தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரியவந்து அவர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியரை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமாரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அவரை கைது செய்யவும் இந்து முன்னணி சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கேரளாவை இருந்த ஜெபக்குமாரை இன்று காலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.