கணவரை இழந்த 25 வயது பெண்ணுடன் நெருக்கம்: பிறந்த குழந்தை ரூ.2 இலட்சத்திற்கு விற்பனை: நால்வர் அதிரடி கைது.!
கணவரை இழந்த 25 வயது பெண்ணுடன் நெருக்கம்: பிறந்த குழந்தை ரூ.2 இலட்சத்திற்கு விற்பனை: நால்வர் அதிரடி கைது.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள கிராமத்தில், திருமணமான 25 வயது பெண் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்ததால், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு சென்று குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
அங்குள்ள மூக்கனூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஜீவா. இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுநராக வேலை பார்க்கிறார். ஜீவா - இளம்பெண் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் பல்வேறு சமயங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் பெண்மணி கர்ப்பமாகவே, கடந்த செப்.15ம் தேதி குழந்தையையும் பெற்றெடுத்து இருக்கிறார்.
ஜீவா பெண்ணை ஏற்றுக்கொள்ள தயாரானதாக கூறப்படும் நிலையில், ஜீவாவின் குடும்பத்தினர் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமானது, 2 குழந்தைகள் இருப்பது தொடர்பாக தெரிந்துகொண்டு ஜீவாவை கண்டித்து இருக்கின்றனர். தற்போது பிறந்த குழந்தையையும் வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதனால் ஜீவா - அவரின் காதலி இடையே தகராறு ஏற்பட, குழந்தையை யாருக்கேனும் தத்துக்கொடுத்து ஊரறிய திருமணம் செய்யலாம் என ஜீவா தெரிவித்துள்ளார். இந்த விசயத்திற்கு பெண் சம்மதிக்காமல் போகவே, கட்டாயப்படுத்தி குழந்தையை பறித்துச்சென்ற ஜீவா, கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பப்பி (வயது 30), உறவினர் மணிகண்டன் (வயது 34) ஆகியோரின் உதவியுடன் குழந்தை விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
குழந்தைக்கு ரூ.2 இலட்சம் பணம் வழங்குவதாக நாட்றாம்பள்ளி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 47) என்பவரும் பேரம்பேசி முடித்துள்ளார். சம்பவத்தன்று குழந்தையை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுச்சென்ற ஜீவா, இனி நாம் எப்போதும்போல உல்லாசமாக இருக்கலாம். திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி குழந்தையை கேட்க, குழந்தை மீட்கப்படாது என கூறியுள்ளார். இதனையடுத்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பெண்மணி புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தையை விற்பனை செய்த ஜீவா, பப்பி, மணிகண்டன், தமிழ்செல்வன் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.