வாட்சப் செய்தி பார்த்து செங்காந்தள் கிழங்கு சாப்பிட்ட இளைஞர் பலி.. கண்ணீரில் குடும்பத்தினர்..!
வாட்சப் செய்தி பார்த்து செங்காந்தள் கிழங்கு சாப்பிட்ட இளைஞர் பலி.. கண்ணீரில் குடும்பத்தினர்..!
சமூக வலைதளத்தில் உலாவரும் போலியான தகவலை நம்பி செங்காந்தள் கிழங்கு சாப்பிட்ட இளைஞர் பலியான சோகம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், மின்னூர் கிராமத்தை சார்ந்தவர் லோகநாதன் (வயது 25). இவரின் நண்பர் நாட்றம்பள்ளி இரத்தினம் (வயது 35). இருவரும் கல்குவாரியில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இருவரும் செங்காந்தள் செடியின் கிழங்கை பச்சையாக சாப்பிடும் பட்சத்தில், உடல் ஆரோக்கியம் மற்றும் ஜொலிக்கும் சருமத்தை பெறலாம் என வாட்சப் தகவல் ஒன்றை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, வாட்சப் தகவலை பார்த்த இருவரும் செங்காந்தள் செடி கிழங்கை பச்சடியாக சாப்பிட்டு சில நிமிடத்திலேயே வாந்தி, மயக்கத்தால் அவதிப்பட்டுள்ளனர்.
இதைக்கண்ட அவர்களின் உறவினர் விசாரிக்கையில் உண்மை தெரியவரவே, இருவரையும் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். இதில் லோகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிடவே, இரத்தினத்திற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.