×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் அர்ஜுன் பாணியில்., ஆன் ஸ்பாட்டில் தீர்வு கண்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த்..! கைதட்டி ஆரவாரம் செய்த மக்கள்..!!

நடிகர் அர்ஜுன் பாணியில்., ஆன் ஸ்பாட்டில் தீர்வு கண்ட திமுக எம்.பி கதிர் ஆனந்த்..! கைதட்டி ஆரவாரம் செய்த மக்கள்..!!

Advertisement

 

மக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து, அவர்களுக்கான வளர்ச்சிப்பணியையும் அதிகாரிகளுக்கு கர்ஜனையாக உத்தரவிட்ட எம்.பி கதிர் ஆனந்தின் செயலால் அவரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரமாகி தங்களின் மகிழ்ச்சியை அன்பாக வெளிப்படுத்தினர்.  

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கு உள்ளூர் மக்களால் நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. உதயேந்திரம், மேட்டுப்பாளையம் கிராமம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினரான கதிர் ஆனந்திடமும் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.  

அதற்கான சட்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து, நாடாளுமன்ற உறுப்பினரான கதிர் ஆனந்தின் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் பேருந்து நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு கதிர் ஆனந்த் இன்று நேரில் சென்றிருந்தார். 

அச்சமயம் அங்கு வசித்து வரும் மக்கள் எம்.பி கதிர் ஆனந்திடம் திரண்டு வந்து, "தாங்கள் பலகாலமாக இக்கிராமத்தில் வசித்து வருகிறோம். பேருந்து நிறுத்தம் காட்டுவதாக அதிகாரிகள் வீடுகளை காலிசெய்ய சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? எங்கு செல்வது? என தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர். 

அதனைக்கேட்ட எம்.பி கதிர், "மக்களுக்கான தேவையை தான் செய்ய உங்களின் தொகுதி எம்.பி-யாக நான் பணியாற்றுகிறேன். உங்களுக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடலாம்" என்று கூறியவாறு தாசில்தாருக்கு தொடர்பு கொண்டு விபரத்தை கேட்டறிந்தார். 

இதனால் தங்களின் பகுதியின் வளர்ச்சிக்காக என்று முக்கிய முடிவை எடுத்த மக்கள், எம்.பி கதிர் ஆனந்திடம் நிலம் கொடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து, கதிர் பேருந்து நிலையம் கட்ட மகிழ்ச்சியுடன் மக்களிடம் கூற, அங்கிருந்த பொதுமக்கள் பலரும் அவரை பாராட்டி நன்றி தெரிவித்து ஆரவாரப்படுத்தினர். 

இந்நிகழ்வின்போது எம்.பி கதிர் ஆனந்த் பேசுகையில், "பேருந்து நிறுத்தத்திற்கு மட்டும் தேவையான இடத்தை எடுத்துக்கொள்ளலாம், பிற இடங்களில் இருந்து ஒரு செங்கல் கூட எடுக்கக்கூடாது" என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

முன்னதாக பேருந்து நிறுத்தம் வரும் பகுதியில் தாசில்தார், நில அளவையாளர் ஆகியோர் சாலையில் பிற இடங்களையும் அளந்து மக்களின் வீடுகளையும் காலி செய்ய கூறி இருக்கின்றனர். இதனை மக்கள் புகாராக எம்.பியிடம் கூறவே, அவர் நிகழ்விடத்தில் இருந்தவாறு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறையுடன் அதிரடி உத்தரவிட்டார். 

இந்நிகழ்வில் திமுக எம்.பி கதிர் ஆனந்தின் செயலுக்கு அப்பகுதி மக்கள் மனதார நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர். 

முதல்வன் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரே போன் காலில் மக்களின் குறைகளை தெரிந்து அதனை தீர்த்து வைத்திருப்பார். அதேபோல எம்பி கதிர் ஆனந்த் ஒரே போனில் மக்களின் குறைகளை தீர்த்து, அங்குள்ள மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tirupattur #Mettupalayam #tamilnadu #dmk #Kathir Anand
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story