கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல்; வாலிபர் குத்திக்கொலை., வாகனங்கள் சூறை.. திருப்பத்தூரில் பரபரப்பு.!
கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல்; வாலிபர் குத்திக்கொலை., வாகனங்கள் சூறை.. திருப்பத்தூரில் பரபரப்பு.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, கோணமேடு கிராம, வி.எஸ்.கே காலனி பகுதியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. சம்பவத்தன்று பூங்கரகம் ஊர்வலம் நடைபெற்ற நிலையில், கோணமேடு மற்றும் காமராஜர் நகர் பகுதி இளைஞர்களிடையே நடனமாடுவதில் தகராறு நிலவி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் காமராஜர்புரம் பகுதியில் வசித்து வரும் மேளத் தொழிலாளி சந்துரு (வயது 18) என்பவர், மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல், போராட்டம், வாகனங்கள் சூறை
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சந்துருவை கொலை செய்த நபர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், கோணமேடு பகுதியில் இருக்கும் ஆட்டோ, இருசக்கர வாகனம், வீட்டின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இதையும் படிங்க: கையில் சிகிரெட், கட்டையுடன் மாமூல் கேட்டு அடாவடி; நூதன பிச்சையெடுத்த ரௌடியின் பகீர் மிரட்டல்.!
இதனால் அப்பகுதியில் பதற்ற சூழல் நிலவியது. வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோணமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்ததால் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் சண்டை; பரபரப்பான சைதாப்பேட்டை நீதிமன்றம்.!