தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்ணை தனியே அழைத்த காவலரை நொறுக்கியெடுத்த உறவினர்கள்.. திருப்பூரில் பரபரப்பு சம்பவம்.!

பெண்ணை தனியே அழைத்த காவலரை நொறுக்கியெடுத்த உறவினர்கள்.. திருப்பூரில் பரபரப்பு சம்பவம்.!

Tiruppur Avinashi Cop Sexual Harassment Woman Her Relations Attacked cop Advertisement

இளம்பெண்ணை தனிமையில் சந்திக்க வர அழைப்பு விடுத்த காவலருக்கு உறவினர்கள் புடைசூழ தர்ம அடி விருந்தாக வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண், நேற்று முன்தினம் மதிய நேரத்தில் காதலருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே சென்ற அவிநாசி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சுப்பிரமணி (வயது 38) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். 

இளம்பெண் சாலையோரம் தனியே நின்று பேசிக்கொண்டு இருப்பதை கண்ட காவலர் சுப்பிரமணி, பெண்ணிடம் விசாரணை செய்வது போல பேச்சு கொடுத்துள்ளார். மேலும், அவரின் அலைபேசி எண்ணையும் வாங்கிய நிலையில், மாலையில் பெண்ணுக்கு தொடர்பு கொண்ட சுப்பிரமணி, தனியே சந்திக்க வரச்சொல்லியுள்ளார்.

Tiruppur

விபரீதத்தை புரிந்துகொண்ட இளம்பெண் தனது உறவினர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, உறவினர்களின் திட்டப்படி சுப்பிரமணி கூறிய இடத்திற்கு இளம்பெண் செல்ல, அவரை பின்தொடர்ந்தவாறு உறவினர்களும் வந்துள்ளனர். 

இதனை சற்றும் எதிர்பாராத காவலர் சுப்பிரமணி சாலையோரம் காத்திருக்க, பெண்மணி காவலரை கைகாண்பித்ததும் உறவினர்கள் பாய்ந்து அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த காவலர் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவமனைக்கும் அனுப்பிய வைக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், இரண்டாம் நிலை காவலராக சுப்பிரமணியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruppur #tamilnadu #Avinashi #Sexual Harassment #woman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story