வெளியே ஒரிஜினல், உள்ளே டூப்ளிகேட்.. ஸ்மார்ட்போனிலும் போலி.. திருப்பூரில் அதிர்ச்சி.!
வெளியே ஒரிஜினல், உள்ளே டூப்ளிகேட்.. ஸ்மார்ட்போனிலும் போலி.. திருப்பூரில் அதிர்ச்சி.!
திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜவுளித் தொழிற்சாலைகளில், இந்தியாவெங்கும் வசித்து வரும் நபர்கள், தங்களின் குடும்ப முன்னேற்றத்திற்காக ஓயாத உழைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு வாரம், மாதம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனிடையே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைப்பகுதிகளில் மிகக்குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தான் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால், விலைஉயர்ந்த செல்போனை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி நூதன மோசடிகள் நடத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: திருப்பூர்: விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல், தாக்குதல் சம்பவம்; ஐவர் அதிரடி கைது.!
சரவீஸ் சென்டரில் அம்பலமான உண்மை
இவ்வாறான மோசடி நபர்களிடம் சிக்கும் நபர்களிடம் மாறுதல் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன், பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. பின் அவை பழுதானால் அல்லது கீழே விழுந்தால் சர்விஸ் சென்டருக்கு சென்று சொல்லப்படும்போது உண்மை அம்பலமாகிறது.
ஏற்கனவே சோனி டிவி போன்று போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டிவிக்கள் வடமாநில இளைஞர்களால் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, ஸ்மார்ட்போனில் மோசடி நடப்பது அம்பலமாகியுள்ளது.
வீடியோ நன்றிநக்கீரன்
இதையும் படிங்க: திருப்பூர்: சொத்துக்காக இப்படியா?.. மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகன்.. அரங்கேறிய வெறிச்செயல்.!