அரசு பேருந்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு வலிப்பு.. ஓட்டுனரின் சாமர்த்திய செயலால், குவியும் பாராட்டுக்கள்.! ராயல் சல்யூட்.!!
அரசு பேருந்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு வலிப்பு.. ஓட்டுனரின் சாமர்த்திய செயலால், குவியும் பாராட்டுக்கள்.! ராயல் சல்யூட்.!!
திருப்பூர் நோக்கி பயணித்த அரசு பேருந்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு மூச்சு திணறலுடன் வலிப்பு ஏற்பட, சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த அரசு பேருந்து, நேற்று இரவு நேரத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சென்றுகொண்டு இருந்தது. பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், கர்ப்பிணி பெண்ணொருவரும் பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு பேருந்து பயணத்தின் போதே திடீரென வலிப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படவே, அவருடன் பயணித்தவர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தகவலை தெரியப்படுத்திருக்கிறார். இதனையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் விரைந்து செயல்பட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பேருந்தை இயக்கியுள்ளார்.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பேருந்து வந்ததும், எதோ அவசர நிலை என்பதை உணர்ந்துகொண்ட மருத்துவ பணியாளர்களும் விரைந்து செயல்பட்டு விசாரித்து கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் வந்த பிற பயணிகளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். பின்னர், பேருந்து தனது இலக்கை நோக்கி புறப்பட்டு சென்றது. பெண்ணின் உடல்நிலையை புரிந்துகொண்ட சாமர்த்தியமாக செயல்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு சமூக வலைத்தளத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ராயல்சல்யூட்.