×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருப்பூர்: பெற்றோரை பார்க்க வந்த இடத்தில் கொடூரம்.. பெற்றோர்-மகன் கொலை வழக்கில் கண்ணீர் சோகம்.!

திருப்பூர்: பெற்றோரை பார்க்க வந்த இடத்தில் கொடூரம்.. பெற்றோர்-மகன் கொலை வழக்கில் கண்ணீர் சோகம்.!

Advertisement

பல்லடத்தையே அதிரவைத்த படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், சேமலைக்கவுண்டம்பாளையம், வலுப்பூரம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் தெய்வ சிகாமணி. இவரின் மனைவி அலமாத்தம்மாள். இவர்கள் முதிய தம்பதிகள் ஆவார்கள். தம்பதிகளுக்கு செல்வ குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: #Big Breaking: தாய்-தந்தை, மகன் கொடூர கொலை.. தமிழகமே அதிர்ச்சி.. பல்லடத்தில் துயரம்.!

தோட்டத்து வீட்டில் பயங்கரம்

செல்வகுமாருக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் கோவையில் வசித்து வரும் நிலையில், அவ்வப்போது வீட்டிற்கு வந்து பெற்றோரை பார்த்துச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. அதன்படி, சம்பவத்தன்று வீட்டிற்கு வந்திருந்த செல்வகுமார், அவரின் பெற்றோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இன்று காலை மூவரும் தோட்டத்து வீட்டில் சடலமாக இருந்த நிலையில், அங்கு வேலை பார்த்து வரும் நபர், தம்பதிகளின் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தது உறுதியானது.

மூவரும் கொலை

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தம்பதிகள் நகை, பணத்திற்காக கொலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. கொலையாளிகளை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தகவல் அறிந்து வந்த செல்வகுமாரின் மனைவி கதறியபடி வீட்டிற்கு வந்தார். காவல் கண்காணிப்பாளர் அவரிடம் விசாரணையும் நடத்தினார். உரத்த குரலில் கதறியழுத அவரை அதிகாரிகளும், உறவினர்களும் சமாதானப்படுத்தினர்.

இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை படுகொலை... முறை தவறிய உறவால் விபரீதம்.!! காதலானுக்கு வலை வீச்சு.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Father Mother Son Murder Case #Tiruppur Palladam #திருப்பூர் #police investigation #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story