நடத்துனரிடமே கைவைத்த பிட்பாக்கெட்... திருப்பூரில் சம்பவம்... சோகத்தில் நடத்துனர்.!
நடத்துனரிடமே கைவைத்த பிட்பாக்கெட்... திருப்பூரில் சம்பவம்... சோகத்தில் நடத்துனர்.!
திருப்பூர் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து நம்பியூருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நேற்று மாலை பயணிகளுடன் திருப்பூரில் இருந்து நம்பியூருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில், பேருந்தின் நடத்துனர் மணிபர்ஸை பேருந்தில் பயணிகள் போல பயணம் செய்த திருடன் அபகரித்து இருக்கிறான். இதனை அறியாத நடத்துனர் தனது பணியை கவனித்து வந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து எதற்ச்சையாக நடத்துனர் பர்ஸை தேடியபோது அது காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பதறிப்போன நடத்துனர் பேருந்தை ஓரமாக நிறுத்தச்சொல்லி, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முன்னிலையில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், நடத்துனரின் பர்ஸ் கிடைக்கவில்லை. இதனால் அவர் வருத்தத்தில் ஆழ்ந்தார்.