தேசவிரோத கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திருப்பூர் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை?; ஏற்றுமதியாளர்கள் சங்கம் பரபரப்பு தகவல்.!
தேசவிரோத கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலக்கமாக திருப்பூர் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை?; ஏற்றுமதியாளர்கள் சங்கம் பரபரப்பு தகவல்.!
தொழிலாளர்களுக்கு இடையே திட்டமிட்டு பிரச்சனை உருவாக்கப்பட்டுள்ளது என திருப்பூர் விவகாரத்தில் பகீர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் தங்கியிருந்து பணியாற்றி வரும் பீகார் மாநிலம் உட்பட பல வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்களால் தாக்கப்படுகிறார்கள் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க பீகார் மாநிலத்தில் இருந்து 4 பேர் கொண்ட எம்.எல்.ஏ குழு இன்று தமிழகம் விரைகிறது. ஆனால், திருப்பூரில் அப்படியான எந்த மோதலும் நடக்கவிலை என தமிழக தரப்புகள் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை, மேலும், இதுபோன்ற தகவல்களின் பரப்புதல் தவறானது; விவகாரங்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தாது.
நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒரு குழு இதன் பின்னணியில் உள்ளது. அனைத்து ஏற்றுமதியாளர்களும் உங்களுடன் நிற்கிறார்கள். நாங்கள் ஹெல்ப்லைன் எண்ணை 8883920500 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளோம்.. உங்கள் அனைவரையும் இங்கேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.