காதல் & முறையற்ற உறவுகளால் கர்ப்பம்.. அபார்சன் மாத்திரையால் மருத்துவமனையில் அனுமதியாகும் இளம்பெண்கள்.. திருப்பூரில் பகீர்.!
காதல் & முறையற்ற உறவுகளால் கர்ப்பம்.. அபார்சன் மாத்திரையால் மருத்துவமனையில் அனுமதியாகும் இளம்பெண்கள்.. திருப்பூரில் பகீர்.!
தமிழகத்தின் குட்டி வடமாநிலமாக இருப்பது திருப்பூர் மாவட்டம். இங்குள்ள பனியன் நிறுவனங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாது வாமாநிலத்தின் வெவ்வேறு பகுதியை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகிறார். 5 இலட்சம் பிற மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், 3 இலட்சம் வடமாநில தொழிலாளர்கள் என 8 இலட்சம் பேர் அங்கு பணியாற்றி வருகிறார்கள்.
திருப்பூர் மாநகரம், பல்லடம், அவிநாசி உட்பட பல பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பலரும், அங்கு வீடெடுத்து தங்கி இருந்து வருகின்றனர். இந்நிலையில், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாடு & வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது, அவர்கள் கருக்கலைப்பு மாத்திரை உபயோகம் செய்ததன் விளைவாக உடல்நலம் பாதிக்கப்பட்டது உறுதியானது.
அதாவது வெளியூர் & வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் இளம்பெண்கள் காதல் அல்லது முறையற்ற உறவுகளால் கர்ப்பமாகி, பெற்றோர் - உறவினர்களிடம் விஷயத்தை மறைத்து மருந்துக்கடையில் சுயமாக கருக்கலைப்பு மாத்திரை வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர்.
மருத்துவரின் பரிந்துரை இன்றி கருக்கலைப்பு மாத்திரை வழங்கக்கூடாது என விதி இருந்தாலும், மருந்துக்கடையில் ரூ.1000 முதல் ரூ.1500 வரை என விற்பனை செய்வதை வாங்கி சாப்பிட்டு இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்குள்ள பல மருந்துக்கடைகளில் சோதனை செய்த அதிகாரிகள், சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை வைத்திருந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பான பல சம்பவங்கள் வெளிவந்துள்ள நிலையில், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.