ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திட்டத்துடன் திருட்டு... ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்.. 20 சவரன் நகைகள் கொள்ளை.!
ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு திட்டத்துடன் திருட்டு... ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்.. 20 சவரன் நகைகள் கொள்ளை.!
வீடுகளில் ஆட்கள் இல்லாததை தெள்ளத்தெளிவாக நோட்டமிட்ட மர்ம நபர்கள், அடுத்தடுத்து 2 திருட்டு சம்பவங்களை நிகழ்த்தி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, முள்ளிப்பட்டு ஊராட்சியில், வீட்டுவசதி வாரியம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் சம்பத். இவர் ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி ஆவார். இவரின் மனைவி சாந்தா. தம்பதிகள் தங்களின் வீட்டில் தனியே வசித்து வருகிறார்கள்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சந்தாவிற்கு வேலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கணவருடன் வேலூர் சென்றுவிடவே, இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 15 சவரன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதனைப்போல, அப்பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவன ஊழியர் செந்தில், தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதனையும் நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆரணி நகர காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் நடந்த திருட்டு சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.