கலியுகத்தில் ஒரு அர்ஜுனன்.. ரூ.10 இலட்சம், 15 சவரன் நகைகளில் தவறவிட்ட பயணியிடம் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர்.!
கலியுகத்தில் ஒரு அர்ஜுனன்.. ரூ.10 இலட்சம், 15 சவரன் நகைகளில் தவறவிட்ட பயணியிடம் ஒப்படைத்த அரசு பேருந்து ஓட்டுநர்.!
திருவண்ணாமலையில் இருந்து சென்னை வழித்தடத்தில், நடத்துனர் இல்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நடத்துனர் இல்லா அரசு பேருந்து பயணம் செய்துள்ளது.
தனது பயணத்தை நிறைவு செய்த பேருந்தை, அதன் ஓட்டுநர் சிவகுமார் சுத்தம் செய்கையில் அதில் பை இருந்துள்ளது. அந்த பையை சோதனை செய்கையில் பணம், நகை, செல்போன் போன்றவை இருந்துள்ளது. இதனால் யாராவது தங்களின் பணத்தை விட்டுவிட்டு சென்று இருக்கலாம் என்று ஓட்டுநர் அமைதி காத்துள்ளார்.
சிறிது நேரத்தில் பெண்மணி அழுதுகொண்டு ஒவ்வொரு பேருந்தாக ஏறி, இறங்கி எதையோ தேடிக்கொண்டு இருந்தார். அவரை கவனித்த ஓட்டுநர் விசாரிக்கையில், அவர் பையை தவறவிட்டது தெரியவந்தது. மேலும், அதில் இருந்த பணம் மற்றும் நகை, செல்போன் குறித்த விபரத்தையும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நீங்கள் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் நான் தான். என்னிடமே உங்களின் பை உள்ளது என்று கூறிய ஓட்டுநர், போக்குவரத்து கண்காணிப்பாளரின் அறைக்கு பெண்ணை அழைத்து சென்று விபரத்தை கூறி பொருட்களை ஒப்படைத்துள்ளார். அதிகாரியும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பை அதுதானா? என விசாரணை நடத்தி அவரிடமே ஒப்படைத்தார்.
பெண் தவறவிட்டிருந்த பையில் 15 சவரன் நகை, ரூ.2 இலட்சம் ரொக்கம், செல்போன் போன்றவை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுனரின் நேர்மையான பணி பாராட்டுக்களை குவித்து வருகிறது.