திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலையார்: அசத்தல் வீடியோ இதோ.. கட்டாயம் பாருங்கள்.!
திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலையார்: அசத்தல் வீடியோ இதோ.. மிஸ்பண்ணவங்க கட்டாயம் பாருங்கள்.!
உலகளவில் புகழ்பெற்ற திரு அண்ணாமலையாரின் திருத்தலம் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில், கார்த்திகை தீபப்பெருவிழா நவம்பர் 26ம் தேதியான இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த நவம்பர் 17ம் தேதி 64 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில், கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்று திருவிழா தொடங்கியது. கடந்த 10 நாட்களாக அண்ணாமலையார் திருவண்ணாமலை நகரை தேரில் வீதி உலாவாக கண்டுவந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீப நாளான இன்று காலை 04:00 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம்கொண்ட மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகாதீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு திருவண்ணாமலையில் ஏற்றப்படும். இந்த 11 நாட்களும் அண்ணாமலையார் ஜோதியாய் தீபமலையின் மீது வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.