தீராத தலைவலியாக பொங்கல் வெல்ல பிரச்சனை..! வெல்லத்தில் துணி., அதிர்ச்சி வீடியோ.!
தீராத தலைவலியாக பொங்கல் வெல்ல பிரச்சனை..! வெல்லத்தில் துணி., அதிர்ச்சி வீடியோ.!
தமிழ்நாடு அரசின் சார்பாக பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் கரும்பு அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன. இவை பல இடங்களில் தரமானதாக கொடுக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் தரமில்லாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
தரமற்ற பொருட்கள் வழங்கப்படாத இடங்கள் குறித்த குற்றசாட்டுகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிகாரிகள், மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்தனர். இவற்றில், அதிகளவு குற்றசாட்டுகள் எழுந்த விஷயமாக வெல்லம் உள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் புளியில் பல்லி இருப்பதாக புகார் வந்த நிலையில், தந்தையின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சோகமும் நடந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லத்தில் துணியொன்று இருந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் தாலுகா, சதுப்பேரியில் உள்ள ரேஷன் கடையில் அன்பரசு எனபவருக்கு கொடுக்கப்பட்ட வெல்லத்தில், துணி ஒன்று இருந்துள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட வெல்லத்தை அவர் சோதனை செய்கையில், அது கட்டியாக இருந்தாலும் அதற்குள் சிறிய அளவிலான துணி இருந்தது.
வெல்லத்தை பேக்கிங் செய்யும் போது ஏற்பட்ட அவசரம் மற்றும் குளறுபடி காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இவ்வாறு தரக்குறைவாக வெல்லம் பேக்கிங் செய்து அனுப்பியது மிகவும் கண்டனத்திற்குரியது ஆகும்.
வீடியோவை பார்க்க : https://www.facebook.com/100016421355535/videos/248316754044427/