SC வரக்கூடாது.. தவெக நிர்வாகிகள் நியமனத்தில் புகுந்த சாதி.. உழைத்தவர்கள் குமுறல்.!
SC வரக்கூடாது.. தவெக நிர்வாகிகள் நியமனத்தில் புகுந்த சாதி.. உழைத்தவர்கள் குமுறல்.!

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் ஆளும் திமுக, ஆட்சியை தவறவிட்ட அதிமுக இடையே கடும் போட்டி நிலவவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி, நாதக ஆகிய கட்சிகளின் மீதும் மக்கள் பார்வை இருப்பதால், வாக்கு பிரிந்து வெற்றி-தோல்வி வாய்ப்பில் பெரும் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த தேர்தல் பரபரப்பில் மக்களுக்கான ஆட்சியை கொடுப்பேன் என நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கி இருக்கிறார். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக அலுவலகம் பரபரப்பில் இருக்கிறது.
இதையும் படிங்க: காதல் தோல்வியால் விபரீதம்? விடுதியில் தூக்கில் தொங்கிய திருவண்ணாமலை மாணவர்.!
இந்நிலையில், இன்று திருவண்ணாமலை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், உழைத்தவர்களுக்கு பதவிகளை கொடுக்காமல், ஜாதியை பார்த்து பதவி கொடுத்து பட்டியலின மக்களான தங்களை புறக்கணிப்பதாக நிர்வாகிகள் சிலர் பகீர் பேட்டி அளித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், "திருவண்ணாமலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையிலான குழு ஜாதி பார்க்கிறது. ஜாதியின் அடிப்படையில் எங்களுக்கு பகுதி வழங்குகிறார்கள். எஸ்.சி சமுதாயத்தினர் முன்னேறி வரக்கூடாது எனவும் கூறுகிறார்கள்.
ஜாதிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து சீட்டு வழங்கப்படும் என்றால், நாங்கள் உழைத்ததற்கு பலன் என்ன? கையில் இருந்த பொருள், ஆட்டோ என பலவற்றை விற்பனை செய்து இயக்கத்திற்காக உழைத்துள்ளோம். இன்று புதிய ஆட்களை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். எங்களின் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்" என தெரிவித்தார்கள்.
இதையும் படிங்க: நிச்சியிக்கப்பட்ட மணமகனுடன் டூவீலரில் அதிவேக பயணம்.. 23 வயது மணப்பெண் பரிதாப பலி.!