அமைச்சரிடம் இருந்து வந்த ஆறுதல் செய்தி..! தமிழகத்தில் குணமாகிய இரண்டாவது நபர்!
Tn 2nd positive case get cures
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய இரண்டாவது நபர் குணமாகியுள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்தார். ஆனால் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல் நபரை மருத்துவர்கள் வெற்றிகரமாக காப்பாற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அதே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இரண்டாவது நபர் குணமாகியுள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நபர் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்து வந்தவர்.
மேலும் கடைசியாக செய்த கோரோனா வைரஸ் சோதனையில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நபர் இன்னும் இரண்டு நாளில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.