மக்களுக்கு மோர், குடிமகன்களுக்கு பீர்; சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அதிகரித்த பீர் விற்பனை.!!
மக்களுக்கு மோர், குடிமகன்களுக்கு பீர்; சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அதிகரித்த பீர் விற்பனை.!!
பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை என்பது 44 டிகிரி வரை சென்றது. இந்தியாவின் வடமாநிலங்கள் மட்டுமல்லாது தமிழகம் உட்பட தென்மாநிலத்திலும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது.
இந்த சமயத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகள் பக்கம் கவனத்தை திருப்பினர். இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது. இதனிடையே, குடிமகன்கள் பலரும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பீர் பக்கம் தங்களின் கவனத்தை செலுத்தினர்.
இதையும் படிங்க: பணியில் இருந்த கட்டுமான தொழிலாளி கடும் வெப்பத்தால் உயிரிழப்பு: காஞ்சிபுரத்தில் சோகம்.!
27% பீர் விற்பனை அதிகரிப்பு
இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் மே மாதத்தில் பீர் விற்பனை என்பது 27% உயர்ந்து இருக்கிறது என டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 1 ம் தேதி முத்த 19 ம் தேதி வரையில் மொத்தமாக தமிழ்நாட்டில் 23,66,856 பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் தான் டாப்பு
கடந்த ஆண்டை பொறுத்தமட்டில் 18,70,289 பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 27% அதிகம் பீர் விற்பனை செய்யபட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம், சேலம், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மண்டலங்கள் அதிக பீர் விற்பனையை அடுத்தடுத்த முதல் 4 இடங்களை தக்கவைத்துள்ளன.
இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.!