மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், அஸ்வினி வைஷ்ணவுடன் தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் நேரில் சந்திப்பு.!
மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், அஸ்வினி வைஷ்ணவுடன் தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் நேரில் சந்திப்பு.!
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம், கட்சி அலுவல் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கட்சி பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி பயணத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களை நேரில் சந்தித்த வினோஜ், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். மேலும், மத்திய சென்னை இளைஞர்களை ஊக்குவித்து, விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து வினோஜ் மத்திய இரயில்வேத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய இரயில்வே கனவை நனவாக்கிய, உணர்ந்துகொள்ள பொறுப்பான மனிதரை நேரில் சந்தித்த அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது" என கூறினார்.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவுகள் உங்களின் பார்வைக்காக..