முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்; 71 பேர் இரத்ததானம் வழங்கி இராஜபாளையத்தில் நெகிழ்ச்சி.!
முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்; 71 பேர் இரத்ததானம் வழங்கி இராஜபாளையத்தில் நெகிழ்ச்சி.!
தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை, அக்கட்சியினர் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், சுமார் 71 பேர் இரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்வை தென்காசி தொகுதி எம்.பி தனுஷ் குமார், இராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ தங்கபாண்டியன் ஆகியோர் தொடங்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தளவாய்புரம் மற்றும் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமும் தொடங்கி வைக்கப்பட்டது. முகாமுக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ சொட்டுமருந்து வழங்கினர்.
இந்நிகழ்வில் நகர சேர்மன் பவித்ரா ஷியாம், தலைமை மருத்துவர்கள் மாரியப்பன், கருணாகரன் பிரபு, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.