தமிழகத்தில் அரைசதம் அடித்த கொரோனா.. ஈரோட்டில் ஒரே நாளில் 8 பேருக்கு கண்டுபிடிப்பு!
Tn corono positive cases reached 50
ஈரோட்டில் இன்று கொரோனா வைரஸ் 8 பேருக்கு பாதித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 1000 பேருக்கும் மேலாக பாதித்துள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 50 பேருக்கு பாதித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மதியம் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் 42 பேருக்கு கொரோனா பாதித்துள்ளதாகவும், 2 பேர் குணமாகி வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும் பதிவிட்டார்.
இந்நிலையில் இன்று மாலை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஈரோட்டை சேர்ந்த 8 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த 8 பேரும் ஏற்கனவே ஈரோடு பெருந்துறையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்தவர்கள்.