தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
Tn corono positive raised to 18
தமிழகத்தில் நேற்று 24.03.2020ல் மட்டும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலையில் பதிவிட்டுள்ள ட்விட்டில் 3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டார். அப்போது மொத்த எண்ணிக்கை 15.
அடுத்ததாக நேற்று இரவு பதிவிட்ட ட்வீட்டில் மேலும் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது என்றும் அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் மற்றும் எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரங்களை பதிவிட்டுள்ளார்.
அதில் நியூசிலாந்தில் இருந்து வருகைபுரிந்த 65 வயது முதியவர் தனியார் மருத்துவமனையிலும், சைதாப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண்மனி கேஎம்சி மருத்துவமனையிலும் லண்டனில் இருந்து வந்த 25 வயது நபர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் தனிமமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.