கால் மிதியடியில் அமைச்சர் உதயநிதியின் முகம்; தன்னை இழிவுபடுத்தியோருக்கு சாட்டையடி பதில்...!
கால் மிதியடியில் அமைச்சர் உதயநிதியின் முகம்; தன்னை இழிவுபடுத்தியோருக்கு சாட்டையடி பதில்...!
தமிழ்நாடு துணை முதல்வரை ஆந்திர அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அவமதித்து வருகின்றனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் துணை முதல்வர், திருப்பதி லட்டு இறைச்சிகொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் விரதம் இருந்து, பாதை யாத்திரையக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பயணம் செய்திருந்தார். அப்போது, அவர் தொண்டர்கள் மற்றும் மக்களிடையே உரையாற்றும்போது, சனாதனத்தை அழிக்க நினைப்போர் அழிந்து போவார்கள் என பேசி இருந்தார்.
இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதியை அணுஅணுவாக ரசித்து சொற்பொழிவாற்றிய கவிஞர் வைரமுத்து; விபரம் உள்ளே.!
இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி, காத்திருந்து பாருங்கள் என பதில் அளித்து இருந்தார். இதற்குப்பின் கொள்கை ரீதியாக ஆந்திரா - தமிழக அரசியல்கள மோதல் ஏற்பட்டது. ஆந்திராவில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்பார்ப்பதாக, அங்குள்ள தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் பவன் கல்யாணின் ஆதரவாளர்கள் சர்ச்சை செயலை செய்து வருகின்றனர்.
கால்மிதியாக உதயநிதி முகம்
இதனிடையே கோவில் ஒன்றின் வாசலில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முகத்தை கால் மதியாக பயன்படுத்துவது போன்ற அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதற்கு துணை முதல்வர் பதில் அளித்துள்ளார்.
அந்த சமூக வலைதளபதிவில் உதயநிதி அளித்துள்ள பதிலில், "என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.
தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.
அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது
அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.
கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!" என தெரிவிக்கப்ட்டுள்ளது.
துணை முதல்வரின் எக்ஸ் (ட்விட்டர்) பதிவு
இதையும் படிங்க: #Breaking: "ஆடம்பர பிரத்தியேக நாற்காலி" - நா.த.க நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.! அடுத்த அதிர்ச்சி.!